நடிகர் தனுஷ் ரஜினிகாந்த் குடும்பத்தினரை மிரட்டுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த ஜனவரி மாதம் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ போவதாக அறிவித்திருந்தனர். இருவரும் பிரிவை அறிவித்த நாளில் இருந்தே அவர்கள் பற்றி ஏதாவது ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தனுஸை இனி எழ விடாமல் செய்ய லதா ரஜினிகாந்த் சில மறைமுக வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி தனக்கு தெரிந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் பேசி தனுஷுக்கு இனி வாய்ப்பு தரக்கூடாது என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து இயக்கத்தில் இறங்கினர் தனுஷ்.அனால் அதிலும் ரஜினிகாந்த் குடும்பத்தார் முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான தனுஷ் இனிமேலும் அமைதியாக இருந்தால் சரியா வராது என முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஜினி குடும்பத்தினரிடம் பேசி தனுஷ் இனிமேல் நீங்கள் என் வழியில் குறுக்கீட்டால் பிரஸ்மீட் வைத்து அனைத்து விஷயங்களையும் போட்டு உடைத்து விடுவேன் என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் நான் அனைத்து விஷயங்களையும் கூறினால் உங்கள் குடும்ப மானம் தான் போகும் என தனுஷ் பேசியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ரஜினியின் குடும்பத்தினர் திகைத்துப் போயுள்ளனர். தனுஷ் பிரஸ்மீட் வைக்கப் போவதாக கூறிய இந்த தகவல் தான் தற்போது கோலிவுட்டில் செம சூடாகி பரவி வருகிறது.