Categories
மாநில செய்திகள்

OMG: மார்ச் மாதத்தில் 122 ஆண்டுகள் இல்லாத அளவு…. வெப்பநிலை பதிவு… அறிவியலாளர்கள் முன்னெச்சரிக்கை….!!!!!

122 இல்லாத அளவிற்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானியல் கழகம் அறிவித்துள்ளது.

நாட்டில் கடந்த மார்ச் மாதம் இதுவரை 122 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானியல் கழகம் அறிவித்துள்ளது. போதிய மழையின்மை காரணமாக கடந்த மார்ச் மாதம் வட மாநிலங்களில் வறண்ட வானிலை நிலவிவருகிறது. தில்லியில் மார்ச் மாதம் 15.9 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

மார்ச் மாதம் முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் வெயில் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதிவான 33.09 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையே இதுவரை பதிவான அதிகபட்ச மார்ச் மாதாந்திர வெப்ப நிலையாக இருந்து வந்தது. இந்த நிலையில் 2022 மார்ச் மாதம் இதுவரை இல்லாத மாதாந்திர சராசரி வெப்பநிலையை பதிவு செய்திருக்கிறது. 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மார்ச் மாதம் 33.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக இந்திய வானியல் கழகம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து ஹரியாணா, சத்தீஸ்கர்,  இமாச்சல பிரதேசம், ஜம்மு, மகாராஷ்டிரம், குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற 10 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. வெப்ப அலைகள் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அறிவியலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Categories

Tech |