அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மருத்துவ மதிப்பீட்டு முகாம் சார்பாக நேற்று வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றுள்ளது.
இந்த முகாமில் பயிற்றுனர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். பால் பாண்டியன் முன்னிலை வகித்தார். கல்லமநாயக்கன்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கண் மருத்துவர் பவுன்ராஜ் மற்றும் செவித்திறன் அலுவலர்கள் ,மனநல மருத்துவர்கள் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இந்த முகாமில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் 150 பேர் கலந்து கொண்டனர்.