நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவாக்சின், கோவிஷில்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில் விரைவில் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று ஐ சி எம் ஆர் வைரலாஜி அமைப்பின் இயக்குனர் ப்ரியா ஆப்ரகாம் கூறியுள்ளார். இரண்டு தவணை செலுத்திய பிறகு கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி 8 மாதங்களில் குறைகிறது என்று கூறிய அவர், மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தினால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும், ஒமைக்ரானுக்கு எதிராக எதிர்வினை ஆற்றுகிறது எனவும் கூறியுள்ளார்.
Categories