Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

”ரேஷன் கார்டுக்கு ரூ.900” புதுவை மக்களுக்கு கொண்டாட்டம் ….!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச துணிக்குப் பதிலாக குடும்ப அட்டைக்கு ரூபாய் 900 வங்கியில் செலுத்தப்படும் என புதுச்சேரி சமூகநலத் துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரி சமூகநலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

‘புதுச்சேரி மாநில ஆளுநர், முதலமைச்சர் ஒப்புதலோடு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச துணிக்குப் பதிலாக, ரொக்கப்பணம் அளிக்கப்படுகிறது.

சிவப்பு நிற குடும்ப அட்டைகளுக்கு 900 ரூபாயும் மற்ற குடும்ப அட்டைகளுக்கு 450 ரூபாயும் அவரவர் வங்கிக் கணக்கில் இன்று முதல் செலுத்தப்படும்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு சமூக நலத்துறை சார்பில் 18 வயது பூர்த்தியான குடும்ப அங்கத்தினருக்கு 500 ரூபாய் விதம் அவர்களின் குடும்ப தலைவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

சமூகநலத் துறை வெளியிட்ட செய்திகுறிப்பு

மேலும், பொங்கல் பரிசுப் பொருட்களுக்கு ஈடாக 170 ரூபாயும் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |