டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் இந்நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் பார்வையாளர்களை அதிகளவில் கவர்ந்து வருகிறது. அதில் நேற்று பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணப் பெட்டியை எடுக்க ஜூலி மற்றும் ஸ்ருதி இருவருக்கும் போட்டி நடந்தது. அவ்வாறு நடந்த கடும் போட்டியில் சுருதி வெற்றியடைந்து 15 லட்ச ரூபாய் பணத்தை கைப்பற்றினார். அவருக்கு ஈடாக கடினமாக முயற்சித்து விளையாடிய ஜூலியை இப்போது ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பிக்பாஸ் வீட்டில் முதல்நாள் முதலே ஜூலிக்கு எதிராக பல்வேறு வேலைகளை போட்டியாளர்கள் செய்து வந்தனர்.
இதற்கு முன்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலிக்கு பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்தது. பல ஆண்டுகள் கடந்தும் அதனை நினைவில் வைத்துக்கொண்ட சக ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஜூலியை ஏதாவது ஒரு வகையில் காயப்படுத்தி வந்தனர். குறிப்பாக நேற்று நடைபெற்ற போட்டியில் ஜூலி அப்பணத்தை எடுத்து விடக்கூடாது என்று தாமரை உள்ளிட்ட பல பேரும் நினைத்தனர். அதுமட்டுமின்றி ஜூலி பிக்பாஸ் வீட்டில் அணிந்து இருக்கும் ஆடை குறித்தும் சில சர்ச்சைகள் எழுந்தது. தற்போது இந்த கருத்துக்கு ரசிகர்களிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஏனெனில் பிக்பாஸ் வீட்டில் ரம்யா பாண்டியன், ஸ்ருதி போன்றோர் மிகவும் கவர்ச்சியான உடையை அணிகின்றனர்.
இந்நிலையில் ஜூலியை மட்டும் மட்டம்தட்டிப் பேசுவது எவ்விதத்தில் நியாயம் என்று தற்போது சோஷியல் மீடியாவில் அவருக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளியாகி வருகிறது. இவ்வாறு எதிர்ப்புகள் தடைகள் இருக்கும்போதும் அதை ஜூலி கையாளும் வகையும் அனைவரையும் பாராட்ட வைத்து உள்ளது. இப்போது ஜூலி செய்யும் அனைத்து செயல்களிலும் ஒரு முதிர்ச்சி உள்ளது. தனக்கு கொடுக்கப்பட்ட இந்த 2வது வாய்ப்பை அவர் மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார். ஆகவே இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளராக செல்வதற்கு ஜூலி மிகவும் தகுதியானவர் ஆவார். ஓவியாவுக்கு ஆதரவாக ஜூலியை விமர்சனம் செய்த ரசிகர்கள் இப்போது ஜூலிக்கு ஆதரவு அளித்து அவரை பாராட்டி வருகின்றனர்.