Categories
மாநில செய்திகள்

இனி விமானங்களில் “தமிழில் அறிவிப்பு “: மத்திய அரசு தகவல்

சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும்அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா் ஹா்தீப் புரி தகவல் தெரிவித்துள்ளாா்.

சென்னையிலிருந்து புறப்படும் பல சா்வதேச விமானங்களில் தமிழில் அறிவிப்பு இருப்பதாகவும், ஆனால் இந்திய விமான நிறுவனங்கள் தமிழில் அறிவிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.  இந்நிலையில் இது தொடா்பாக மத்திய அரசிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டும் அது நிறைவேறாமல் இருந்தது.

இதனைத்தொடா்ந்து, தமிழ்வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன், சென்னை வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் அறிவிப்பு தமிழில் வெளியிட  என மத்திய அரசிடம் வலியுறுத்தியிருந்தாா்.

இதுதொடர்பாக அமைச்சா் க.பாண்டியராஜனுக்கு மத்திய அமைச்சா் ஹா்தீப் புரி கடிதம் எழுதியுள்ளாா். அதில் சென்னை வந்துசெல்லும் பயணிகள் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Categories

Tech |