மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வடக்கு பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் எஸ்.எஸ். கோவில் பகுதியில் வசிக்கும் பாலாஜி என்பதும், மேலும் அவர் அரசு மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலாஜியை கைது செய்ததோடு அவரிடமிருந்த 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.