Categories
உலக செய்திகள் சினிமா செய்திகள்

“பணம், புகழ் என சிறப்பாக வாழ்ந்த பிரபலங்கள்”… சில மோகத்தால் காணாமல் போனவர்கள்…!!!!!

பணம், புகழ் உள்ளிட்டவற்றால் சிறப்பாக வாழ்ந்தவர்கள் சில தவறால் காணாமல் போயுள்ளனர்.

ஒருவருக்கு பணம் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கின்றது. ஆனால் அளவுக்கு மீறினால் அந்த பணமே ஒருவரின் வாழ்வை அழிக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. இப்படி வாழ்க்கையில் நடந்த சில மனிதர்களை நாம் பார்க்கலாம்.

குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் ஒவ்வொரு போட்டியிலும் கோடிகோடியாக சம்பாதித்து அவரை மிஞ்சும் அளவிற்கு யாரும் இல்லாத அளவிற்கு வளர்ந்தார். ஆனால் கற்பழிப்பு, போதைப்பழக்கம், கோபம் போன்ற தீய பழக்கவழக்கங்களால் அதுவே அவரின் புகழ் செல்வத்தை அழித்து தரைமட்டத்திற்கு அழைத்துச் சென்றது.

நடனம் என்றாலே ஞாபகம் வருவது மைக்கேல் ஜாக்சன் தான். அந்த அளவிற்கு நடனத்துக்கும் இசைக்கும் பெயர் போனவர். இவர் நீண்டகாலம் வாழ வேண்டும் என்பதற்காக பணத்தை தண்ணியாக செலவு செய்து அழகுக்காக பல அறுவை சிகிச்சைகளை செய்தார். ஆனால் ஓரின சர்ச்சையில் சிக்கி புகழுக்கு பங்கம் விளைவித்து சீக்கிரமே இறந்து போனார்.

டைகர் உட்ஸ் உலக விளையாட்டு வீரர்களில் அதிகமாக பணம், புகழை சம்பாதித்த இவர் பெண்களின் மீது மோகம் கொண்டதால் தன மனைவியிடம் மாட்டிக்கொண்டு பாதி சொத்தை அவரின் மேல் எழுதி வைத்தார்.

பில் கிளின்டன் ஜனாதிபதியாக சிறப்பாக பணியாற்றி மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். ஆனால் மோனிகா லெவின்ஸ்கி இவர் மீது பாலியல் குற்றத்தை சுமத்திய பிறகு இவரின் புகழ் காணாமல் போனது.

Categories

Tech |