உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இவ்வாறு ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கில் உக்ரைன் நாட்டில் கலாச்சார சின்னங்கள் சேதமடைந்து இருக்கிறது. அந்த வகையில் தேவாலயங்கள், வரலாற்று கட்டிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் உட்பட ஆயிரக்கணக்கான கலாச்சார சின்னங்கள் போர் காரணமாக சேதமடைந்து உள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனின் மரியுபோல் நகரமே தரைமட்டமாகி இருக்கிறது. மேலும் கட்டிடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகள் என ரஷ்ய படைகள் பாரபட்சம் இன்றி தாக்குதலை நடத்திய நிலையில், துறைமுக நகரமான மரியுபோல் பெரும் சேதங்களை சந்தித்துள்ளது. ரஷ்ய தாக்குதலுக்கு பின் மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மரியுபோல் நகரம் மாறி இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வருகிறது.