திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் நெல்லி வாசல் நாடு மதுரா புலியூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நபர்கள் கிராமத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு வேனில் சென்ற போது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் என்பவரின் மனைவி துர்கா, அவரது மகன்கள் பவித்ரா, ஷர்மிளா, என்பவரின் மனைவி செல்வி, வேந்தன் என்பவரின் மனைவி சுதந்திரா மற்றும் குள்ளப்பன் என்பவரின் மனைவி மங்கை போன்ற 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இதே விபத்தில் சுமார் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள். அவர்களுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டு இருக்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் உடனடியாக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன். என முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.