தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழத்திருப்பூந்துருத்தி தென்னை மரம் ஏறும் தொழிலாளியான சந்தானம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி சந்தானம் கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த சந்தானத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சந்தானத்தை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சந்தானத்தின் மனைவி ஆனந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.