கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் வாரிசுகள் கருணை நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் வாரிசுகள் கருணை நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு நிவாரணத்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்படுகிறது. இதில் தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 1,243 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இந்த மனுக்களை பரிசீலனை செய்து 1,040 பேருக்கு ரூபாய் 50,000 நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் இரு முறை பெறப்பட்ட மனுக்கள் என்ற முறையில் 126 மனுக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் மே 18-ம் தேதி கொரோனா நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது. எனவே இன்னும் 30 நாட்களுக்குள் நிவாரணத் தொகை வேண்டுபவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். இதை விண்ணப்பிக்க தவறவிட்டவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் சென்று முறையிடலாம். அதன்பிறகு பெறப்படும் மனுக்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கொரோனா நிவாரணத்தொகை பெற வேண்டியவர்கள் உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்