Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“ஏன் இன்னும் சாப்பிட வரவில்லை” அதிர்ச்சி அடைந்த பெற்றோர்…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

வீட்டின் மாடியில் வைத்து வாலிபரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தேவேந்திரன் நீண்ட நேரமாகியும் சாப்பிடுவதற்கு கூட வரவில்லை என அவரது பெற்றோர்கள் வீட்டின் மாடியில் சென்று பார்த்த போது மர்ம நபர்களால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரது உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் தேவேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து வீட்டின் மாடியில் தேவேந்திரன் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கலாம் எனவும், நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் இச்சம்பவம் நடந்து இருக்கலாம் என காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து வீட்டின் மாடியில் கொலை சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 தனிப்படை அமைத்து கொலை செய்த குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை உதவி கமிஷனர் ரவி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |