Categories
மாநில செய்திகள்

தனிநபர் கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு… குறைவான வட்டியில் வழங்கும் வங்கிகளின் பட்டியல் இதோ…!!!!!

இன்றைய காலகட்டத்தில் பர்சனல் லோன் அல்லது தனிநபர் கடன்கள் அவசரமாக பணம் தேவைப்படும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் வீட்டை பழுது பார்ப்பது, குழந்தைகளின் கல்வி செலவு, திருமணங்கள், சிறு கடன்களை செலுத்துதல் போன்ற வேறு எந்த நோக்கத்திற்காகவும் தேவையான நிதி இல்லாத போது தனிநபர் கடன்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் தனிநபர்கள்  மிக எளிதாக வாங்கக் கூடிய ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. வங்கிகளில் நிதி நிறுவனங்கள் என பலவும் தனிநபர் கடன்கள் வழங்க மிக ஆர்வம் செலுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக உடனடியாக கடன் வழங்கும் சேவையை பல நிறுவனங்கள் தற்போது வழங்கி வருகின்றது. குறிப்பாக இணையத்தின் மூலமாக இந்த சலுகைகளை உடனடியாக ஆதார் கார்டு அப்டேட் செய்து பெற்றுக் கொள்ளும் வசதியும் தற்போது வந்துள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதம் தோராயமாக 8.9 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை உள்ளது. அதில் ஒரு நபர் வாங்கும் கடன் கிரெடிட் ஸ்கோர் தேவை என்ன என்பதைப் பொருத்து வட்டி விகிதம் மாறுபடுகிறது. உதாரணமாக 5 லட்சம் ரூபாய்க்கு 5 கால அவகாசத்தில் வட்டி விகிதம் மாதத்தவணை தொகை ஒவ்வொரு வங்கிகளும் மாறுபட்டு வருகிறது. அந்த வகையில்,

  • பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதம் – வருடத்திற்கு வட்டி விகிதம் 8.90% – தவணை தொகை – ரூ.10,355
  • யூனியன் வங்கியில் வட்டி விகிதம் – வருடத்திற்கு வட்டி விகிதம் 8.90% – தவணை தொகை ரூ.10,355
  • சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா – வருடத்திற்கு வட்டி விகிதம் 8.90% – தவணை தொகை ரூ.10,355
  • இந்தியன் வங்கி – வருடத்திற்கு வட்டி விகிதம் – 8.50% – தவணை தொகை ரூ.10,258
  • பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி – வருடத்திற்கு வட்டி விகிதம் – 9.50% – தவணை தொகை ரூ.10,501
  • ஐடிபிஐ வங்கி – வருடத்திற்கு வட்டி விகிதம் – 9.50% – தவணை தொகை ரூ.10,501
  • பாங்க் ஆப் மகாராஷ்டிரா Vs எஸ்பிஐ Vs பாங்க் ஆஃப் பரோடா பாங்க் ஆப் மகாராஷ்டிரா – வருடத்திற்கு வட்டி விகிதம் – 9.55% – தவணை தொகை ரூ.10,513
  • எஸ்பிஐ – வருடத்திற்கு வட்டி விகிதம் – 9.60% – தவணை தொகை ரூ.10,525

Categories

Tech |