Categories
சினிமா தமிழ் சினிமா

“I am not a Politician…. I am a Soldier” தெறிக்க விடும் ட்ரைலர்….. ரசிகர்கள் வெளியிட்ட Decoding கருத்துகள்….!!

பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான 2 மணி நேரத்திலேயே 4.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லர் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரது எதிர்பார்ப்பையும் மிஞ்சும் அளவிற்கு அமைந்து நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது அவ்வகையில்  ட்ரெய்லர் வெளியாகி 2 மணி நேரமே ஆன நிலையில் இதுவரை 4.2 மில்லியன்  பார்வையாளர்களை கடந்துள்ளது. அதோடு ட்ரெய்லருக்கு ஏராளமான கருத்துகளும் வந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் ட்ரெய்லரின் தொடக்கத்தில் காவி நிற பேனர் ஒன்றை கருப்பு நிற கோட் அணிந்த விஜய் கிழிக்கிறார். இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மற்றொரு வகையில் பகிர்ந்து வருகின்றனர். அதாவது காவி என்னும் அரசியலை கிழிக்கப் போவது கருப்புநிற அரசியல் தான் என்று பகிர தொடங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ட்ரெய்லரில் விஜய் சிவப்பு நிற கோடாரியை கையில் வைத்துக் கொண்டு “உங்களுடைய விளையாட்டுகள் எல்லாம் எனக்கு செட்டாகாது நான் ஒரு போராளி” என கூறியிருக்கிறார். இதை ரசிகர்கள் எந்த விதத்தில் எடுத்துக் கொள்ளப் போகிறார்களோ?

Categories

Tech |