Categories
அரசியல்

PF சந்தாதாரர்களே….! “UAN இல்லாமல் பேலன்ஸ் சரிபார்ப்பது எப்படி”….? இதோ முழு விவரம்….!!!!

EPFO உறுப்பினர்கள் UAN எண் இல்லாமல் தங்களது கணக்குகளை எப்படி சரிபார்ப்பது என்பது தொடர்பான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பிஎஃப் என்பது ஊழியர்களுக்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சேமிப்பு திட்டம். இந்த சேமிப்பு திட்டம் மாத ஊதியம் பெறும் ஒவ்வொரு ஊழியர்களின் எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்த சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு சந்தாதாரர்களுக்கு EPF வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் அறிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில்  EPFO வழங்கும் பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்ள பயனர்கள் இந்த செயலியை Google Play Store அல்லது App Store லிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்த செயலியில் உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் இருப்பை சரிபார்த்து தங்களது பாஸ்புக் களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மேலும் EPFO உறுப்பினர்கள், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிடுவதன் மூலமாக UAN இல்லாமல் தங்கள் இருப்பை சரிபார்க்கலாம். அந்த வகையில் UAN இல்லாமல் உங்கள் PF கணக்கு பேலன்ஸை சரிபார்க்கும் வழிகாட்டுதல்கள் இதோ:

முதலில் epfindia.gov.in இன் EPF முகப்பு பக்கத்தில் உள்நுழையவும். உங்கள் EPF இருப்பை அறிய இங்கே கிளிக் செய்யவும்’ என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது epfoservices.in/epfo/ என்ற பக்கம் திறக்கும். அங்கு “உறுப்பினர் இருப்புத் தகவல்” என்பதற்கு செல்லவும். உங்கள் மாநிலத்தை தேர்ந்தெடுத்து உங்கள் EPFO அலுவலக இணைப்பைக் கிளிக் செய்யவும். தொடர்ந்து PF கணக்கு எண், பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும். இப்போது ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்தால் PF இருப்பு காட்டப்படும்.

Categories

Tech |