நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆவரைகுளத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்து தனது காருக்கு பெட்ரோல் போடுவதற்காக அம்பலவாணபுரத்தில் இருக்கும் பெட்ரோல் பங்க்கிற்கு சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கி விட்டார்.
சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.