ஷாங்காய் நகரில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது தினமும் 5 ஆயிரம் வரை பதிவாகி வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டில் போடப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் உலகளாவிய வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஷாங்காய் நகரில் நேற்று கொரோனா அறிகுறி இல்லாமல் 6,500 பேர் மற்றும் அறிகுறியுடன் 260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர்களிடம் இருந்து பிரித்து நிர்வாகம் தனிமைப்படுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பெரும்பாலானோர் தோற்று பாதிக்கப்பட்டவர்களை தனிமைப் படுத்துவது போன்ற முறைகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் தனியாகவும், பெரியவர்கள் தனியாகவும் வெவ்வேறு முகாம்களில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். அந்த வகையில் இன்று காலை 3 மாத குழந்தை உள்பட தனிமை முகாமில் 5 முதல் ஆறு வயதுடைய மற்றும் தவழும் வயதான 3 குழந்தைகள் ஒரே கட்டிலில் பெற்றோர்கள் யாரும் இன்றி தனியாக ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.
சீனாவின் இந்த கடுமையான கட்டுப்பாட்டுகளுக்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பின்பு அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால் பார்வையாளர்கள் அந்த போட்டோக்களை அதிக எண்ணிக்கையில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து சீன அரசின் பூஜ்ஜிய கொரோனா கொள்கையின்படி இந்த கடுமையான முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த கடுமையான நடவடிக்கையின் மூலம் கொரோனா வைரஸை விரைவாக ஒழிப்பதும், கட்டுப்படுத்துவதிலும் சீனா கவனம் செலுத்தி வருகிறது. என்னதான் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்று இப்படி பச்சிளம் குழந்தைகளை பிரித்து தனியாக வைத்தது பெற்றோர்களை கதி கலங்க செய்தது உள்ளது. பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இத்தாலிய வெளிநாட்டு தூதரகங்கள் ஷாங்காயில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு இந்த சோதனை ஏற்படலாம் என்று எச்சரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.