Categories
உலக செய்திகள்

நாடு விட்டு நாடு தாவும் புதிய வைரஸ் – இந்திய மக்கள் உஷார்..!!

சைனாவில் இருந்து புதியவகை வைரஸ் பரவி வருவதால் விஞ்சானிகள் கட்டுப்படுத்துவதற்கு வழி தெரியாமல் திணறி வருகின்றனர்.

  • நடுங்கவைக்கும் சைனாவின் புதிய வைரஸ்
  • உயிர்பலி அதிகரிப்பு
  • விஞ்சானிகள் திணறல்
  • அழிக்க வழி தெரியாமல் பரிதவிப்பு

    மொத்த உயிர் பழி  3 பேர்

  • இதுவரை பாதிப்பு 200க்கு மேல்
  • சந்தேகம் 1700 பேர்

அதி வேகமாக பரவி வருகிறது, நாடு விட்டு நாடு தாவி பரவி வருகின்றது. இதனால் தான் மக்கள் பயப்படுகின்றார்கள்.

பரவிய நாடுகள் : 

சீனாவில் உள்ள மனிதர்களின் உடலில் முதலில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஜப்பானுக்கு பரவி உள்ளது. பின்னர் தாய்லாந்து , தென்கொரியாவுக்கு பரவியுள்ளது. இந்தியாவிற்கு எங்கும் பரவி விடுமோ என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

எந்த வகை வைரஸ் :

இது அப்படி எந்த வகை வைரஸ், விஞ்ஞானிகளால் அழிக்க முடியாமல் திணறிய வைரஸ் என்று கேட்டீங்கன்னா ? இது கரோனா வைரஸ் வகையைச் சார்ந்தது. அதாவது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட ”சார்ஸ்” வைரஸ்சின் வகைதான் இந்த ஒரு கரோனா வைரஸ்.

பரவிய விதம் :

இது மிருகத்திலிருந்து மனிதனுக்கு வந்திருக்கிறது. பிறகு மனிதனிலிருந்து மனிதனுக்கே பரவுகின்றது. வேகமாக பரவி வருகிறது.  இதனால் இந்தியா உட்பட உலக நாடுகளில் சர்வதேச விமான நிலையங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக வளர்ந்த நாடுகளான அமெரிக்கா , ஐரோப்பா போன்ற நாடுகளில் விமான நிலையத்திலேயே சைனா , ஜப்பான் , தாய்லாந்து ஆகிய விமானங்களில் இருந்து வருபவர்கள்  இந்த வைரஸ் கிருமியால்  பாதிக்கப்பட்டுள்ளார்களா ? என்ற சோதனை செய்தபிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

 இதன் அறிகுறி :

இந்த வைரஸ் தாக்கியுள்ளவர்களுக்கான அறிகுறிகளாக மூச்சு திணறல்அதிகமாக இருக்கும். இந்த வைரஸ் உடலில் வந்துவிட்டால் காய்ச்சல் , இருமல் இருக்கும். சைனாவிலிருந்து இப்படி புதிய வைரஸ் வந்து இருப்பதை விஞ்ஞானிகள் மிகப்பெரிய சவாலாக பார்க்கின்றார்கள். இது வேகமாக பரவி வருகிறது என்பது ஒரு சோகமான செய்தி.

Categories

Tech |