மன உளைச்சலில் லாரி உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமத்தில் இருக்கும் ராம் நகரில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சரவணன் சொந்தமாக லாரி வைத்து அதன் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் லாரி தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் சரவணன் மன உளைச்சலில் இருந்துள்ளார். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சரவணன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் சரவணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.