சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாராப்பூர் சமுதாய நலக்கூடம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கிராவல் மண் நடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மூன்று பேர் மணல் அள்ளி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.
அவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன், நாகராஜ் மற்றும் மாரிமுத்து என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு, மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.