அரசு மருத்துவமனை பணியாளர்கள் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 2020-ல் நியமிக்கப்பட்ட 300-க்கும் அதிகமான பணியாளர்கள் தொடர்ந்து பணிபுரிய பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய 2021 டிசம்பர் மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரையிலான ஊதியமும் வழங்க வேண்டும் எனக் கூறி மருத்துவமனை வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகம் முன்பு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் மற்றும் அரசு மருத்துவமனை டீன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மருத்துவமனை பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர். இதனால் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.