கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் உலகின் மாபெரும் பணக்காரர்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அதானி உலக அளவில் அம்பானிக்கு அடுத்தபடியாக 14வது இடத்தை பிடித்திருந்தார். ஒன்பது உறுப்பினர்கள் உள்ள இந்த பட்டியலில் அதானி புதிதாக இடம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி 10 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள உலகின் மாபெரும் பணக்காரர்கள் பட்டியலில் அதானி இடம் பெறுகிறார் .
இந்த தர வரிசையானது கிட்டத்தட்ட ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் கோடி அளவிலான சொத்து மதிப்பு கொண்டவர்களுக்கான பட்டியல் ஆகும். இதுகுறித்து ஹருன் குளோபல் ரிச்நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் இயக்குநர் அனாஸ் ரஹ்மான் ஜூனைத் கூறுகையில், உலக மக்கள் தொகையில் 18 சதவிகிதத்தினர் இந்தியாவில் உள்ளனர். அதில் உலக கோடீஸ்வரர்களில் 8 சதவீதத்தினர் இந்தியர்கள் தான் ஆவர் என கூறியுள்ளார்.