இலங்கையில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை தடுக்கும் விதமாக இணையதளங்களை கண்காணிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் மக்கள் போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை குறைக்கும் விதமாக இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இணையதளங்கள் வாயிலாக மக்களை ஒருங்கிணைப்பது மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக ஒரு சமூக செயல்பாட்டாளரை இலங்கை அரசு கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என இலங்கை மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. அதோடு இது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.