ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கை லாவ்ரோவ், இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்து உரையாற்றினார். இந்த சந்திப்பிற்கு பிறகு பிரதமர் அலுவலகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்ய போரை நிறுத்த பல்வேறு நாட்டு அதிபர்களுடனும் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்தும் எந்த வகையான முயற்சியிலும் ஈடுபட இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஏற்கனவே ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக உக்ரைன் போர் தொடங்கிய உடனே ரஷ்ய அதிபர் புதினுடன் மூன்று முறையும் உக்ரைன் அதிபருடன் இரண்டு முறையும் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாற்றியிருந்தார்.