Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில்…. ஒமைக்ரானை விட வேகமாக பரவும் புதிய வகை கொரோனா…..உலக சுகாதார அமைப்பு தகவல்….!!!

 தற்போது புதிதாக உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் எக்ஸ்இ  (XE) – என்று அழைக்கப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக  கொரோனா  வைரஸானது கண்டறியப்பட்டது. மேலும் உலக மக்களை ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கொரோனா வைரஸ் கதிகலங்க வைத்து, சுகாதார நெருக்கடியை மட்டுமின்றி, பொருளாதார ரீதியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பல நாடுகளிலும் ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையானது முடங்கிப் போனது.
இதையடுத்து இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டறியப்பட்டு, முழுவீச்சில் போடப்பட்டு வந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பானது குறைந்து வருகிறது. அதன் பின் அண்மையில் பரவிய  ஒமைக்ரான் வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவியது. ஆனால் அதன் பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் தற்போது தொற்று பாதிப்பானது கணிசமாக குறைந்ததை அடுத்து, உலகநாடுகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றன. எனினும் சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவலானது மீண்டும் வேகமெடுத்து உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பானது தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புதிதாக உருமாற்றம் அடைந்துள்ள இந்த கொரோனா வைரஸ் எக்ஸ்இ  (XE) – என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஒமைக்ரானை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  அந்த வகையில், ஒமைக்ரான் வைரசின் BA’1 மற்றும் BA.2- திரிபுகளில் இருந்து உருமாற்றம் அடைந்தது எனவும் பல்வேறு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளியிடம் இருந்து இத்தகைய    Recombinant பிறழ்வுகள் வெளிப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பிரிட்டன் சுகாதார அமைப்பு கூறுகையில், கடந்த ஜனவரி 19 ஆம் தேதி XE- வகை கொரோனா முதன் முதலாக கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 637- பேருக்கு இந்த வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அதே சமயம் வேறு எந்த நாட்டிலும் இந்த புதிய வகை கொரோனா கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளது.

Categories

Tech |