Categories
Uncategorized

ப்ளூ அர்ஜுன் நிறுவனம்…. நான்காவது முறையாக விண்வெளி சுற்று பயணம்…. வெற்றிகரமாக தரை இறங்கிய கேப்சியுல்….!!

ப்ளூ அர்ஜுன் நிறுவனத்தின் ராக்கெட் நான்காவது முறையாக விண்வெளி சுற்று பயணத்தை மேற்கொண்டது.

அமேசான் முன்னாள் நிறுவனர் ஜெப் பெசாஸின் ப்ளூ அர்ஜுன் நிறுவனத்தின் ராக்கெட் நான்காவது முறையாக 6 பேர் கொண்ட குழுவுடன் விண்வெளி சுற்று பயணத்தை மேற்கொண்டது.  இந்நிலையில் ப்ளூ அர்ஜுன் நிறுவனத்தின் தலைமை ராக்கெட் வடிவமைப்பாளர் உள்பட 6 பேர் இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து இந்த ராக்கெட் மேற்கு டெக்ஸாஸில் உள்ள வான் ஹார்ன் ஏவுதளத்தில் வைத்து ராக்கெட் ஏவப்பட்டது.

மேலும் பூமியிலிருந்து     106  கிலோ மீட்டர்  தொலைவில் சுமார் 10 நிமிடங்கள் இந்த ராக்கெட் விண்வெளியில் பயணித்தது.  குறிப்பாக கார்மன் கோடு அருகே ஈர்ப்பு விசையை இழந்து வீரர்கள் சிறிது நேரம் விண்ணில் மிதந்து கொண்டிருந்தனர்.   பின்பு வீரர்கள் சென்ற கேப்சியுல் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

Categories

Tech |