Categories
உலகசெய்திகள்

அப்படிப்போடு…! மாஸான பதிலடி கொடுத்த அமெரிக்கா…. திக்குமுக்காடிய வடகொரியா….!!

வட கொரியா அண்மையில் நடத்திய பாலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டு ராக்கெட் தொழில் அமைச்சகத்தின் துணை நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

வட கொரியா கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனையை செய்துள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

அதாவது வட கொரிய ராக்கெட் தொழில் அமைச்சகத்தின் துணை நிறுவனங்களான ஹப்ஜாங்காங் டிரேடிங் கார்ப்பரேஷன், அன்சோன் கார்ப்பரேஷன், சன்னிசன் டிரேடிங் கார்ப்பரேஷன், கொரியா ரூன்சன் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.

Categories

Tech |