Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஜி5 தளத்தில் வெளியாகிய “வலிமை”…. “புதிய சாதனை”…. வேற லெவலில் ரசிகர்கள்…!!!!

அஜித்தின் வலிமை திரைப்படம் ஜி5 தளத்தில் வெளியாகி சாதனை படைத்துள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் போனி கபூர் தயாரிப்பில் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. இத்திரைப்படம் சில நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்றிருக்கின்றது. இந்த திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தை ஜி5 தளத்தில் 50 கோடி நிமிடங்கள் ரசிகர்கள் பார்த்து இருக்கின்றார்களாம்‌. இதுபற்றி தயாரிப்பாளரான போனிகபூர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளாதாவது, “வலிமை அதிக முறை பார்த்த மற்றும் அதிக முறை மீண்டும் பார்த்த படமாக இருக்கிறது. வலிமை படம் தொடர்ந்து அனைத்து சாதனைகளையும் முறியடித்து வருகின்றது. 500 மில்லியன் நிமிடங்கள் வலிமை பார்க்கப்பட்டிருப்பதாக” குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |