ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இந்தியா, துர்க்மெனிஸ்தான் இடையேயான 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் துர்க்மெனிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார். தலைநகர் அஷ்காபட்டுக்கு சென்று அவரை துர்க்மெனிஸ்தான் அதிபர் செர்டர் பெர்டிமுகாமெடோ வரவேற்று இருக்கிறார்.
இதற்கிடையில் நேற்று இரு நாடுகளுக்கு இடையே நிதி மற்றும் பொருளாதாரம், பேரிடர் மேலாண்மை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் தொடர்பாக நான்கு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இரண்டு நாட்டு அதிகாரிகள் இடையே கையெழுத்தாகியுள்ளது. மேலும் இந்த பயணத்தை தொடர்ந்து நெதர்லாந்து நாட்டிற்கு ஜனாதிபதி செல்ல இருக்கிறார்.