Categories
உலக செய்திகள்

அவசரநிலை அமல்… இலங்கையில் இந்திய படையா…? வெளியான தகவல்…!!!!

இலங்கைக்கு உதவுவதற்காக இந்திய ராணுவப்படை சென்றுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொருளாதார சிக்கலில் தவித்து வரும் இலங்கையில் அரசிற்கு எதிராக  கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அந்த நாட்டின் சட்டம், ஒழுங்கைக் காக்கும் பணியில் உதவுவதற்காக இந்திய படை வீரர்கள் அங்கு வந்து இறங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதனை இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கமல் குணரத்னே திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். உள்நாட்டு வீரர்கள் பாதுகாப்பு சூழலை கையாள முடியும் எனவும் வெளி உதவி எதுவும் தேவை இல்லை என்று அவர் நேற்று கூறியிருக்கிறார். இந்திய வீரர்கள் இலங்கை வந்துள்ளதாக கூறப்படும் தகவலை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் உறுதியாக மறுத்துள்ளது.

Categories

Tech |