நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானின் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய முக்கிய சாட்சியான பிரபாகர் சைல் நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். கடந்த ஆண்டு கோவாவின் கப்பலில் மும்பை போதைப்பொருள் தடுப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அதில் போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் ஷாருக்கானின் மகன் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.
அந்த வழக்கு விசாரணை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய முக்கிய சாட்சியான பிரபாகர் சைல் நேற்றிரவு திடீரென மரணமடைந்தார். இதற்கு முன்னதாக வழக்கை கையாண்ட மண்டல இயக்குனர் சமீர் சிலரை கைது செய்வதற்காக லஞ்சம் வாங்கியதாக பிரபாகர் தெரிவித்திருந்தார். மேலும் வழக்கு தொடர்பாக முக்கிய தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில் அவர் திடீரென மரணம் அடைந்து இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.