Categories
சேலம் மாவட்ட செய்திகள்

90% உயர்ந்த நூலின் விலை…. ஜவுளித் தொழில் முடங்கும்…. நடவடிக்கை எடுக்க கோரிக்கை….!!

சேலத்தில் ஜவுளி தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் நூல்கள் விலை 90% அதிகமானதால் அதன் உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றார்கள்.

சேலம் மாவட்டத்தில் முக்கியமான தொழிலாக ஜவுளி உற்பத்தி கருதப்படுகிறத . இந்த ஜவுளித் தொழிலை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி பலனடைந்து வருகின்றார்கள். இந்நிலையில் ஜவுளி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலதனமான நூலின் விலை தற்போது உயர்ந்து கொண்டே வருகிறது . இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள்  பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றார்கள்.

மேலும் வேட்டி, சேலை, துண்டு ஆகிய பல்வேறு துணி ரகங்களை தயாரிப்பதற்கு 40 ஆம் நம்பர் நூலயே ஜவுளி நெசவாளர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றார்கள்.  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 50 கிலோ எடை இருந்த 40 ஆம் நம்பர் நூல் 9 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.ஆனால் தற்போது அதே நம்பர் நூலின் விலை ரூபாய் 8,000 அதிகரித்து 50 கிலோ எடை கொண்ட  நூலின் விலை  ரூபாய் 17 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

90 சதவீதம்  நூலின் விலை உயர்ந்துள்ளதால் ஜவுளி நெசவாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் பெரும் பாதிப்பு அடைந்து வருகின்றார்கள்.இந்த உயர்வால் புதிய ஆர்டர்கள் பெருமளவில் குறைந்து கொண்டே வருகின்றது எனவும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இதுபற்றி சேலம் மாவட்ட நூல் வியாபாரிகள் சங்க தலைவர், சரவணன் கூறியது ஆந்திரா மற்றும் தமிழகத்திலுள்ள கோவை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிருந்து ஜவுளிக்கு தேவையான நூல்கள் வாங்கப்பட்டு வருகின்றன.

அங்கு பஞ்சு விலை உயர்துள்ளதால் தொடர்ந்து நூல் விலையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. தற்போது ஜவுளி தயாரிப்பதற்காக அதிகப்படியாக வாங்கப்படும் 40ஆம் நம்பர் நூல் டன் ஒன்றுக்கு ரூபாய் 40 ஆயிரம் வரை உயரப்பட்டு ரூபாய் 4 லட்சத்து 30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.மேலும் நூல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் இதை பெருமளவில் நம்புகின்ற நாங்கள் சிரமப்பட்டு வருகிறோம். இந்த விலை உயர்வால் ஜவுளி தொழில் முடங்கும் வாய்ப்பு அதிகளவில் உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதனை கருத்தில் கொண்டு ஜவுளித் தொழிலை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் .

Categories

Tech |