மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த 13 நாட்களில் 11 முறையாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.108.96க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.99.04க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு உக்ரைன்- ரஷ்யா போர் தான் காரணம் மத்திய அரசு இல்லை என்று ஜி கே வாசன் கூறியுள்ளார். ஆனாலும் இதன் விலையை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வது மத்திய அரசு தான் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.