Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

புன்னகையின் அழகு பற்களில்… பற்களின் ஆரோக்கியத்திற்கு இதோ…

அழகான புன்னகைக்கு தேவை அழகான பற்கள். அழகான மற்றும் ஆரோக்யமான பற்களுக்கு….

  • சாப்பிட்டவுடன் பல் துலக்குவது தவறு குளிர்பானங்கள் அமிலத்தன்மை கொண்ட உணவு வகைகளை சாப்பிட்ட உடன் பல்துலக்கினால் பல் பாதிப்பு அடையும்.

 

  • உணவு பொருட்களில் இருக்கும் அமிலம் பல்லின் எனாமல் பகுதியை சற்று மிருதுவாக மாற்றி இருக்கும். அந்த நேரத்தில் பிரஷ்  கொண்டு பல் துலக்கினால் பல்லின் எனாமல் தேயக்கூடும்.

 

  • பல் வலி ஏற்பட்டால் மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ச்சியான மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

 

  • கிராம்பு, கொட்டைப் பாக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல் வலி மறையும். கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்.

 

  • சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் காத்திருந்தால் நம் வாயில் சுரக்கும் உமிழ்நீர் அந்த அமிலத்தைச் சமன் செய்து விடும். அதன்பிறகு நீங்கள் பல் துலக்கினால் பல்லின் எனாமல் எந்த பாதிப்பும் ஏற்படாது.

 

  • தினமும் காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து பற்கள் துலக்கும் முன் ஒரு நிமிடம் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் 3 வேளை உணவு உட்கொள்ளும் முன் செய்து வந்தால் பற்களில் சொத்தை இருந்து விடுபடலாம்.

 

  • வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பற்களின் மேல் பகுதியில் வைத்தால் பல் வலியை விரைவில் குறைக்க முடியும்.

 

  • சாப்பிட்டு ஒருமணி நேரம் கழித்து பல் துலக்குவது நன்று. அதை போல் சூடாக தேநீர் அருந்திய உடன் குளிர்பானம் குடித்தாலும் பல்லின் எனாமலில் விரிசல் ஏற்படும். அதன் மூலம் பல் கூச்சம் உண்டாகும்.

 

  • ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் புண்களை குணமாக்கலாம்.

காலை மாலை இருவேளையும் பல் துலக்குங்கள் புன்னகையில் மக்களை வென்றிடுங்கள்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |