Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குலை நடுங்க வைக்கும் சம்பவம்…. தாய், 2 1/2 வயது பெண் குழந்தை எரித்துக் கொலை…. உச்சகட்ட கொடூரம்…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் பெரிய மலையூர் வலசை பகுதியில் சிவக்குமார் மற்றும் அஞ்சலை தம்பதியினர் வசித்து வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு மலர்விழி என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது. அஞ்சலை தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அஞ்சலை தனது மகளுடன் ஆடு மேய்ப்பதற்காக பெரிய மலையூர் வலசை அடுத்த மலைப்பகுதிக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து இன்னும் திருமணமாகாத சிவகுமாரின் அண்ணன் கருப்பையா அங்கு விறகு வெட்ட வந்துள்ளார். காட்டு பகுதியில் தனது தம்பி மனைவி அஞ்சலை குழந்தையுடன் தனியாக இருந்ததை பார்த்து, உடனே அஞ்சலையை தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். அதற்கு அஞ்சலை சம்மதிக்காமல் அவரிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த கருப்பையா தான் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். படுகாயமடைந்த அஞ்சலை ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

அஞ்சலையை உயிருடன் விட்டால் குடும்பத்தினரிடம் தன்னை காட்டிக் கொடுத்து விடுவார் என்று பயந்த கருப்பையா, கர்ப்பிணி என்றும் கூட பாராமல் அஞ்சலை மற்றும் இரண்டரை வயது பெண் குழந்தை ஆகியோரை தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்று விட்டார். சிறிது நேரத்தில் தாயும் மகனும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கருப்பையாவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |