Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விலை உயர்வு…. “சிலிண்டரை சவப்பெட்டியின் மேல் வைத்து”…. நூதன ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சி..!!

சமையல் எரிவாயு சிலிண்டரை சவப்பெட்டியின் மேல் வைத்து மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கிய இந்தப் போராட்டத்தில் மண்டல தலைவர் ரகு உட்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள்.

மேலும் சிலிண்டரை சவப்பெட்டியின் மேல் வைத்து மாலை அணிவித்து, மேளம் அடித்து, சங்கு ஊதி, பெண்கள் ஒப்பாரி பாடி போராட்டம் செய்துள்ளனர். இதில் பொதுமக்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தலைமை தபால் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள் பங்கேற்றனர்.

Categories

Tech |