சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் அந்த சிறுமிக்கும் அதே பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்.
இதனையடுத்து அந்த சிறுவன் சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்க்காரம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமி 8 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுவனின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.