ரஷ்யா தொடர்ந்து 38-வது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் துணை பாதுகாப்பு அமைச்சர் கன்னா மாலியர், ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகருக்கு அருகில் உள்ள சில முக்கிய நகரங்களில் இருந்து பின்வாங்கியதையடுத்து மீண்டும் கீவ் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை உக்ரைன் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பதிவில் மாலியர், “ரஷ்ய படையெடுப்பாளரிடமிருந்து கோஸ்டோமல், புச்சா, இர்பின் மற்றும் முழு கீவ் பகுதியும் விடுவிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். உக்ரைன் ராணுவத்தால் இந்த வாரம் கீவிற்கு வெளியே உள்ள பயணிகள் நகரங்கள், புச்சா மற்றும் இர்பின் நகரங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டன. இருப்பினும் அப்பகுதியில் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளை சந்தித்துள்ளனர் என்று நகர மேயர் தெரிவித்துள்ளார்.