Categories
மாநில செய்திகள்

ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறைதான்…. சென்னை ஐகோர்ட் திட்டவட்ட அறிவிப்பு…!!!!

ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

கோவையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை வழக்கில் யாசுதீன் என்பவருக்கு  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 2001ஆம் ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையில் இருக்கும் காலத்தில் சிறையில் ஆய்வு செய்யவந்த சிறைத்துறை டிஐஜி யை  மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர் பிறந்த நாட்களின் போது ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடிய அரசாணைகளின் கீழ் யாசுதீனையும்  முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கையுடன் அவரது தாய் ஷெய்தூன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கை மனுவை தமிழக அரசு நிராகரித்துள்ளது. இந்த நிராகரித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஷெய்தூன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிறையில் உள்ள குற்றவாளிகளின் ஆர்எஸ்எஸ் பிரமுகரை கொலை செய்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்தால் மத ரீதியான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் அது அவரது  உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அளிக்கப்பட்ட அறிக்கையில் அடிப்படையில் யாசுதீனை முன்கூட்டியே விடுதலை செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் ஆயுள் தண்டனை என்பது முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.  ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும்படி கவர்னருக்கு கோர்ட் உத்தரவிட முடியாது என கூறியுள்ளனர். மேலும் அரசின் இந்த உத்தரவில் தலையிட முடியாது. அந்த உத்தரவில் எந்தவித சட்டமும் இல்லை எனக் கூறி இந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

Categories

Tech |