Categories
மாநில செய்திகள்

BREAKING: 1 To 9 ஆம் வகுப்பு வரை கட்டாயம்…. சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் நடப்பு ஆண்டில் கட்டாயம் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தேர்வு ரத்து என நேற்று இரவு செய்தி வெளியான நிலையில் பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது. தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |