டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், டெல்லி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் காரணம் காட்டி பாஜகவுடனான கூட்டணியை சிரோமணி அகாலி தளம் முறித்துக் கொண்டுள்ளது.
இந்நிலையில் பாஜக தனுது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில், புதுடெல்லி தொகுதியில் போட்டியிடும் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து யுவ மோர்ச்சா தலைவர் சுனில் யாதவை பாஜக களமிறக்கியுள்ளது.
ஹரி நகர் தொகுதியில் தஜிந்தர்பால் சிங் பக்காவும், டெல்லி கண்டோன்மென்ட் தொகுதியில் கட்சியின் பூர்வாஞ்சல் மோர்ச்சா தலைவர் மனிஷ் சிங்கும் பாஜக சார்பாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கால்காஜி தொகுதியில் தரம்வீர் சிங், ஷாதாரா தொகுதியில் சங்சய் கோயல் ஆகியோர் களம் காணவுள்ளனர். பாஜக கூட்டணியில் இரண்டு தொகுதிகள் ஐக்கிய ஜனதா தளத்திற்கும் ஒரு தொகுதி லோக் ஜனசக்தி பரிஷத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.