Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்…. பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை….!!!

செஷல்ஸ் தீவு சிறையில் இருக்கும் என மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தூத்தூர் மீனவர்கள் 61 பேர் 5 விசைப்படகுகளில் தேங்காய்பட்டினம் மற்றும் கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றனர். அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் விசைப்படகுகள் திசை மாறி செஷல்ஸ் தீவு எல்லைக்குள் சென்றது. இதன் காரணமாக செஷல்ஸ் தீவு கடற்படையினர் மீனவர்களை கைது செய்தனர். இந்த மீனவர்களை மத்திய, மாநில அரசுகளின் முயற்சியினால் இந்திய தூதரகம் செஷல்ஸ் தீவில் இருந்து பத்திரமாக மீட்டது. கடந்த மாதம் 22-ஆம் தேதி 56 மீனவர்கள் மட்டுமே செஷல்ஸ் நாட்டில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அபராதம் இன்றி  விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் விசைப்படகுகளின் கேப்டன்கள் 5 பேரையும் விடுதலை செய்ய முடியாது என செஷல்ஸ் தீவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த மீனவர்களை விடுவிக்குமாறு, இவர்களின் உறவினர்களும் சர்வதேச மீனவர் அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் அண்டனியும் சேர்ந்து பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். இந்த மனுவில் செஷல்ஸ் தீவில் தவிக்கும் 5 மீனவர்களின் குடும்பத்தினரும் மிகவும் வருத்தத்தில் இருக்கின்றனர். இந்த 5 மீனவர்களின் எதிர்காலம் அரசின் கையில் உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களை மீட்குமாறு கூறியுள்ளனர்.

Categories

Tech |