தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் புஷ்பராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1 மகள், மகன் இருக்கின்றனர். இந்நிலையில் புஷ்பராஜ்க்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு இருந்துள்ளது. இதன்காரணமாக புஷ்பராஜ் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த புஷ்பராஜ் வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மார்த்தாண்டம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் புஷ்பராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.