Categories
உலக செய்திகள்

ஒன்றல்ல.. இரண்டல்ல… 87 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்….!!!

ஜெர்மன் நாட்டில் ஒரு நபர் சுமார் 87 தடவை கொரோனா தடுப்சியை எடுத்துக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த 61 வயதுடைய நபர் Saxony மற்றும் Saxony-Anhalt ஆகிய மாகாணங்களில் இருக்கும் பல்வேறு தடுப்பூசி மையங்களுக்குச் சென்று 87 முறை தடுப்பூசி செலுத்தியிருக்கிறார். அவர் நாள் ஒன்றுக்கு மூன்று தடுப்பூசிகளை செலுத்தியுள்ளார். இந்நிலையில் டிரெஸ்டன் நகரத்தில் இருக்கும் ஒரு தடுப்பூசி மையத்தில் இருந்த பணியாளர் ஒருவர் அந்த நபரை அடையாளம் கண்டு விட்டார்.

அதனைத்தொடர்ந்து Eilenburg என்ற நகரில் இருக்கும் தடுப்பூசி மையத்திற்கு அந்த நபர் சென்றிருக்கிறார். எனவே, அங்கிருந்த பணியாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 87 தடவைக்கும் அதிகமாக தடுப்பூசி செலுத்தி இருப்பார் என்று கூறப்பட்டிருக்கிறது.

எனினும், உண்மையில் எத்தனை தடுப்பூசிகளை அவர் செலுத்தி இருக்கிறார் என்பது சரியாக தெரிவிக்கப்படவில்லை. மேலும் அந்த நபர் தான் ஒவ்வொரு தடவை தடுப்பூசி எடுத்துக் கொள்ள  செல்லும் போதும் புதிதாக தடுப்பூசி ஆவணத்தை எடுத்துச் செல்வாராம். தடுப்பூசி கிடைத்தவுடன் அந்த சான்றிதழ்களில் இருக்கும் தகவல்களை அழித்துவிட்டு தடுப்பூசி எதிர்ப்பாளர்களுக்கு அதனை விற்பனை செய்திருக்கிறார்.

Categories

Tech |