கீரமங்கலம் பகுதியில் கனமழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் சந்தோஷமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வந்தது. வெயில் அதிகமாக அடிப்பதால் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்நிலையில் நேற்று மதியம் சுமார் ஒரு மணி நேரம் விடாமல் கனமழை பெய்ததை பார்த்து விவசாயிகள் சந்தோசமடைந்தனர். மேலும் கடலை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் இருந்தனர். இந்த மழையை பயன்படுத்தி கடலை அறுவடை செய்துவிடலாம் என்று விவசாயிகள், பொதுமக்கள் ஆனந்தம் அடைந்தனர்.