நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு தேங்காய் நார்கள், மஞ்சுகள் எரிந்து நாசமாயின.
திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில் வசித்து வருபவர் முத்துராஜ். இவருக்கு ஆலங்குடி அருகில் அண்ணாநகரில் சொந்தமான நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் தேங்காய் நார்கள், மஞ்சுகள் எதிர்பாராத விதமாக திடீரென்று தீப்பற்றி எரிந்தன.
இதுகுறித்து முத்துராஜ் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இத்தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் மற்றும் படையினர் தண்ணீரை பீய்ச்சிஅடித்து தீயை அணைத்துள்ளனர். ஆனாலும் சுமார் 2 லட்சம் மதிப்பிலான மஞ்சுகள், தேங்காய் நார்கள் தீயில் எரிந்து நாசம் அடைந்தது.