அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாலமநல்லூரில் இருக்கும் தனியார் தோட்டத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது தூக்கில் அழுகிய நிலையில் ஆணின் தலையும், உடல் தரையிலும் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பின் காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கூலி தொழிலாளியான வீரமுத்து என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வீரமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அவரை கொலை செய்து சடலத்தை தூக்கில் தொங்கவிட்டனரா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.