Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“காதலனுடன் பேச முடியல” நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவி தற்கொலை…. கோவையில் பரபரப்பு…!!

காதலனுடன் பேச முடியாததால் பயிற்சி மைய விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொண்டையம்பாளையத்தில் வாரி மெடிக்கல் அகாடமி என்ற பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகளான ஸ்வேதா இந்த பயிற்சி மையத்தில் இருக்கும் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். அதே பயிற்சி மைய விடுதியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவரும் தங்கி படித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது.

இது குறித்து அறிந்த யோகேஸ்வரனின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகனை மதுரைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனால் ஸ்வேதா யோகேஸ்வரனுடன் பேச முடியாமல் மன வேதனையில் இருந்துள்ளார். அதன் பின் வாழ்க்கையை வெறுத்து பயிற்சி மைய விடுதி அறையில் ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |